புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

0
79

Special buses: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 605 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும் இயக்கவுள்ளன.

அதனைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதியான சனிக்கிழமை அன்று 345 பேருந்துகள் இயக்க திட்டமிடப்படுள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு இன்று 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, விடுமுறைக்கு பின்னர் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை, பெங்களூரு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகளான பெங்களூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்காக பயணச்சீடை www.tnstc.in மற்றும் Mobile App மூலமாக முன்பதிவும் செய்துகொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here