‘தேர்தலில் போட்டியிட பணம் இல்லாததால் மறுத்துவிட்டேன்’ – நிர்மலா சீதாராமன்..!

0
137

Nirmala Sitharaman: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனை மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “ஆந்திரா அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒரு மக்களவை தேர்தலில் போட்டியிட ஜே.பி.நட்டா வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் இல்லை என கூறிவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவரா? இந்த மதத்தை சேர்ந்தவரா? போன்ற தேவையில்லாத கேள்விகள் இருக்கும்.

இதுவரை என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன். எனவே என்னால் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என கூறிவிட்டேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here