NTK Seeman: திருநெல்வேலி ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்.
அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றிப் பெற்றால் அது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், நாம் தமிழர் கட்சி வெற்றிப் பெற்றால் அது ஒரு சரித்திரம்.
மத்தியில் கூட்டாட்சியாகவும், மாநிலத்தில் தன்னாட்சியாக மலர வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி வெற்றிப் பெற வேண்டும். ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம்” என்றார்.