திடீரென உயிரிழந்த ரசிகர்.. வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய ஜெயம் ரவி..

0
158

Actor Jayam Ravi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சைரன்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அவர், ‘பிரதர்’, ‘ஜீனி’, ‘தக்லைப்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘ஜீனி’ படத்தில் கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக இருந்த ராஜா(33) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையறிந்த ஜெயம் ரவி, தனது ரசிகரின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here