டெல்லியில் தொடங்கியது ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங்..  கமல் – திரிஷா பங்கேற்பு..

0
139

‘Thug Life’ : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த ‘தக்லைப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகுவதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகிய தகவல் வெளியானது. மேலும், துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

பின்னர் சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மீண்டும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், நடிகர் சிம்புவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘தக்லைப்’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here