பர்த்டே பாய் சமுத்திரகனி..! கேம் சேஞ்சர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்..!

0
167

Actor Samuthirakani: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தனது 51ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சமுத்திரகனி, கேம் சேஞ்சர் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் சமுத்திரகனிக்கு தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் தான் மவுஸ் அதிகம். பல தெலுங்கு படங்களி நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here