நாடாளுமன்ற தேர்தல் 2024 – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிந்தது..! 

0
122

Lok sabha election 2024: நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்று வருகிறது.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னர், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14  தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மராட்டியத்தில் 8 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து முடிந்தது.

மேலும், மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள் , சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் 2 வாக்குச்சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி கடைசி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here