ரத்னம் ரிலீஸில் சிக்கல் – புரட்சி தளபதிக்கு ஆப்பு வைத்த தளபதி..

0
142

Vishal : ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி சக்கப்போடு போட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 26) ரத்னம் படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இருந்தபோதிலும், ரத்னம் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸான கில்லி ரீரிலீஸ் தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ரீரிலீஸாகி ஹவுஸ் புல்லாகி வருகிறது.

இதன் காரணமாக ரத்னம் படத்தை அதிக திரையரங்குகளில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சின்ன திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தனது ரோல் மாடலாக நினைக்கு விஜய்யின் படம் தனக்கு இடையூறாக அமையும் என விஷால் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here