Saluting Major Mukund: மாவீரன் முகுந்த் வரதராஜன்.. வீடியோ வெளியிட்ட ‘அமரன்’ படக்குழு..

0
119

Saluting Major Mukund: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த ‘அமரன்’ படமானது ஒரு இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) படத்தின் உண்மையான கதாநாயகன் முகுந்த் வரதராஜனை நினைவு கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தான் இந்த அமரன் படம், இந்த நிலையில் தற்போது அவரது வரலாறு குறித்த சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கி சண்டைக் காட்சிகளும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ‘அமரன்’ படம் கட்டாயம் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here