செருப்பால் அடிக்க சொன்ன இயக்குநர்.. கேக் வெட்டி கொண்டாட்டம்..

0
107

Hotspot: தமிழில் ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஹாட்ஸ்பாட்’. இந்த படத்தில், கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், கவுரி கிஷன், சோபியா, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதைகள், ஒரு கட்டத்தில் ஒன்று சேர்வதுதான் படத்தின் திரைக்கதை என இயக்குநர் கூறுகிறார். இதுவரை பேசாத விஷயங்கள் இந்த படம் பேசுவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, இந்த படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸானது.

படம் ரிலீஸாகி பல நாட்களாகியும் ரசிகர்கள் மத்தியில் ரீச் கிடைக்கவில்லை. இதனால் அப்செட்டான இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “எங்கள் படம் நன்றாக இருக்கும். தயவுசெய்து ஒருமுறை வந்து பாருங்கள்.

மலையாள படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை இந்த படத்திற்கும் கொடுங்கள். வெளிப்படையாக சொல்லுகிறேன், இந்த படத்தை பாருங்கள் அப்படி உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்” என பேசியிருந்தார்.

இடையில் இயக்குநர் பாக்கியராஜ் இந்த ‘ஹாட்ஸ்பாட்’ படத்தை புகழ்ந்து பேசியிருப்பார். இந்த நிலையில், இன்றுடன் படம் ரிலீஸாகி 25 நாட்கள் ஆன நிலையில் படக்குழுவினர் அனைவரும் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here