உங்க பேரு என்ன?..  சிறுவனின் கேள்விக்கு அமிதாப்பச்சன் சொன்ன பதில்?..  

0
60

Kalki 2898 AD: பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.

இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைதொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியது. அதன்படி, ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் கதாநாயகன் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயர் ‘பைரவா’ என அறிவிக்கப்பட்டது.

‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் பல மாற்றங்கள் வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த இறுதி முடிவும் படக்குழு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் சுவாரசியமான தகவலை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்த படத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிப்பின் கூடிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் அமிதாப்பச்சனின் பெயர் ‘விஸ்வாத்மா’ என்பது தெரிய்வந்துள்ளது.

இது குறித்த வீடியோவில், சிறுவன் ஒருவன் அமிதாப்பச்சனிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கினான், இறுதியில் உங்கள் பெயர் என்ன? என கேட்கும்போது அவர் ‘விஸ்வாத்மா’  என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here