நாளை நடைபெறும் திருமண நிகழ்வு.. உற்சாகத்தில் அபர்ணா தாஸ்.. 

0
156

Actress Aparna: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அபர்ணா தாஸ். மலையாளம், தமிழ் மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அபர்ணா தாசிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறாராம். மேலும், இது குறித்த அழைப்பிதழ் மற்றும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை தீபக் பரம்போல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தொடர்ந்து இருவருக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், சினிமா பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது.

அந்த வகையில் நாளை நடைபெறவுள்ள திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்டங்கள் களைக்கட்டி உள்ளது. இந்தப் புகைப்படங்களை அபர்ணாதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் இந்த புகைப்படங்களைப் பாக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here