‘கூலி’ டைட்டில் டீசருக்கு ரியாக்ட் பண்ண தனுஷ்.. வைரலாகும் போஸ்டர்..

0
112

‘Thalaivar 171 Titile’: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்தப் படம் போதைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ் லுக்கில் இருக்கும் ரஜினியின் கையில் தங்க வாட்ச்களுடன் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டது போல இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஐமேக்ஸ் கேமரா ஷூட் மற்றும் குறிப்பிட்ட காட்சிகள் படப்பிடிப்பு குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறது. மேலும், படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 22) ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வெளியானது. அதன்படி, படத்திற்கு ‘கூலி’ என்ற டைட்டில் வெளியானது. இது குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டிலுக்கு நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ், தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூலி படத்தின் போஸ்டருடன்,  ‘மாஸ்’ என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here