மதுரை சித்திரை திருவிழா.. அழகரை மனம் உருகி தரிசித்த நடிகர் சூரி..

0
134

Actor Soori: தமிழ் சினிமாவின் காமெடி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தவர் சூரி. அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் காமெடியான நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘கருடன்’, ‘கொட்டாகாளி’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், பக்தர்களுக்கு அருள் தந்தபடி வைகை ஆற்றில் இறங்கினார்.

இந்த கண்கொள்ளா காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என கூறி பரவசமடைந்து பார்த்தனர். தொடர்ந்து காலை 7:25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி கலந்துகொண்டார்.

தொடர்ந்து, கள்ளழகருக்கு பெரிய மாலையை வைத்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தார். நடிகர் சூரி மதுரையில் நடக்கும் அனைத்து விஷேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் நிலையில் இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here