வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க ப்ளீஸ்.. விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்..

0
92

Ghilli Re-Release: தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவரது ஆரம்பக்கட்ட படங்கள் சரிவர ரீச் ஆகாமல் இருந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டும் விஜய்யை தூக்கிவிட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.

இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.

‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கில்லி’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 20) ரீரிலீஸானது. இதுவரை ரீ ரிலீஸான படங்களில் கில்லி படத்திற்கு தான் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

ரீ ரிலீஸான கில்லி படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்த ஷோக்களும் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கில்லி ரீ-ரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்தார்.

பின்னர், விஜய்யின் கையை பிடித்துக்கொண்டு, “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால், வருடத்திற்கு ஒரு படமாவது பண்ண வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here