ஐபிஎல் விவகாரம்.. நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் சம்மன்..

0
146

Actress Tamannaah: 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் (viacom) என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளை பேர்பிளே (Fairplay) என்ற நிறுவனம் தனது செயலியின் மூலம் சட்டவிரோதமாக ஒளிபரப்பி உள்ளது.

பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது குறித்த விசாரணை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விசாரணைக்கு நடிகை தமன்னா நேரில் ஆஜராக இருக்கும். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here