ஆபாச படங்களை பரப்பிய கவர்ச்சி நடிகை.. போலீசில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு..

0
163

Actress Rakhi Sawant: ஹிந்தி சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர், தமிழில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘என் சகியே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ராக்கி சாவந்த்தும், ஆதில் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், கணவர் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி ராக்கி சாவந்த் போலீசில் புகார் அளித்தார். அதன் பின்னர், ஒரு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த் மீது புகார் அளித்துள்ளார்.

தனது ஆபாச படங்களை ராக்கி சாவந்த் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறி மும்பை அம்பேலி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. தொடர்ந்து இரண்டாவது முறையும் அவரது மனு தள்ளுபடியானது. இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராக்கி சாவந்த் முன்னாள் கணவர் ஆதில் கூறுகையில், ‘ராக்கி சாவந்த் நான்கு வாரங்களில் போலீசில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராக்கி சாவந்த் துபாயில் தலைமறைவாக இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் போலீசாரால் கைது செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here