தேர்தல் நடத்தை விதிமீறல்: பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு..

0
115

Lok Sabha: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜுன் 1ஆம் தேதி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி மீது பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here