சூர்யா பட இயக்குநருடன் இணையும் துருவ் விக்ரம்.. அப்போ சிம்பு?..

0
145

Dhruv Vikram: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுதா கொங்கரா. ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தார். ஆனால், ‘சூரரைப் போற்று’ படம் வெளியாகி நான்கு ஆன் நிலையில் அடுத்த படங்கள் இயக்கவில்லை.

இந்த நிலையில் சூர்யாவுடன் மீண்டும் அவர் இணையும் ‘புறநானூறு’ படம் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு தற்போது அந்த படமும் தள்ளிப்போனது.

‘புறநானூறு’ படத்தின் கதைக்கு மறுவடிவம் கொடுப்பதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால் படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் தான் சுதா கொங்கரா துருவ் விக்ரமுக்கு புதிய கதை ஒன்றை சொல்லியுள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் துருவ் விக்ரம் படத்தை உறுதி செய்யவில்லையாம். துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் சிம்பு தனது 50ஆவது படத்தை இயக்க கோரி சுதா கொங்கராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் முன்னதாக வெளியானது. இந்நிலையில், துருவ் விக்ரமை வைத்து சுதா கொங்கரா படம் இயக்க சென்றால் அப்போ சிம்பு நிலைமை என்ன ஆனது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here