தியேட்டர்களை அதிர வைத்த விஜய்.. வசூல் வேட்டையில் கில்லி.. எத்தனை கோடி?..

0
113

Ghilli Re-Release: தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவரது ஆரம்பக்கட்ட படங்கள் சரிவர ரீச் ஆகாமல் இருந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டும் விஜய்யை தூக்கிவிட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.

இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.

‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி ரீரிலீஸானது. இதுவரை ரீ ரிலீஸான படங்களில் கில்லி படத்திற்கு தான் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

ரீ ரிலீஸான கில்லி படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்த ஷோக்களும் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் முதல் நாள் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு கூட இவ்வளவு வசூல் கிடைக்க வில்லை, ஆனால் ரீரிலீஸுக்கு இவ்வளவு வசூல் கிடைத்துள்ளதா! என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கில்லி ரீரிலீஸ் இதுவரை ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி ரீரிலீஸானாலும், புதிய படம் ரிலீஸ் ஆகுவதுபோல ரசிகர்கள் மாஸ் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here