லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய கவர்ச்சி நடிகை.. எதிர்ப்பு தெரிவித்த சக்திமான்..

0
131

Mukesh Khanna: பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் ஜீனத் அமன். திருமணம் பற்றி ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் சில தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஜீனத் அமன் (72). இவரிடம் சமீபத்தில் இரு ரசிகர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு தனது இன்ஸ்டா மூலம் ரிப்ளை கொடுத்துள்ளார். அதில், லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நீங்கள் ஓருவடன் காதலில் இருக்கிறீர்கள் என்றால் திருமணம் செய்வதற்கு முன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து பார்க்க வேண்டும். கட்டாயம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும். இதே தான் எனது இர மகன்களுக்கும் கூறியுள்ளேன்.

அவர்கள் இருவரும் தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கின்றனர். எனக்கு இதுதான் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு குடும்பத்திற்குள் போவதற்கு முன்பு அவர்கள் இருவரும் தங்களுடைய உறவுகள் குறித்து பரிசோதிக்க வேண்டும்.

அனைத்து விஷயங்களையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களால் எல்லாம் முடிகிறதா? என சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்குள் மன கஷ்டம் ஏற்படுகிறதா? சின்ன சின்ன சண்டைகள் வருகிறதா? என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

அந்த சமயத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்பதுதான் முக்கியம். அனைத்திலும் ஒற்றுமை இருந்தால் இருவரும் தாராலமாக திருமணம் செய்துகொள்ளலாம். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பாவம் என பார்ப்பவர்கள் கூறுவார்கள், அதையெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது” என அந்த பதிவில் குறிப்பிட்டார்.

இந்த பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளை கவர்ந்த பிரபல சக்திமான் தொடரில் நாயகனாக நடித்த நடிகர் முகேஷ் கன்னா, இந்த பதிவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நம்முடைய கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் லிவ்-இன் உறவுமுறைகள் அங்கீகரிக்கப்படவில்லை. அது மேற்கத்திய கலாச்சாரம். ஜீனத் அமன் மேற்கத்திய கலாசாரத்தின்படி வாழ்ந்தவர். அதனால், அவர் இதுகுறித்து பேசி வருகிறார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here