10 ஆயிரம் வரிகளில் கவிதை.. விஜய்க்காக உலக சாதனை படைத்த ரசிகர்..

0
117

Vijay Fan: தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் தளபதி விஜய், தற்போது வெங்கட் பிரபு இயகத்தில் ‘The G.O.A.T.’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் தான் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் தனது தமிழக வெற்றிக் கழக கட்சி பணிகளில் ஈடுபடவுள்ளார். அதற்காக விஜய் தயாராகி வருகிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த சென்ற இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த அளவிற்கு விஜய்க்கு ரசிகரகள் இருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனை வெளிப்படுத்தும் விதமாக கில்லி ரீ ரிலீஸை உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ வெளியானது.

அந்த வகையில் தற்போது திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் நடிகர் விஜய்க்காக கவிதை எழுதியுள்ளார். சாதாரணமாக எழுதாமல் அதனை சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் எழுதியிருக்கிறார்.

அதன்படி, கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது கடந்த 16ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை விஜய்க்காக எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கதிருக்கு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here