ரஜினியைச் சந்தித்த ‘தி ப்ரூப்’ பட நாயகி.. வைரலாகும் புகைப்படம்..

0
65

Sai Dhanshika: தமிழ் சினிமாவில், ‘மாஞ்சா வேலு’, ‘பேராண்மை’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் தற்போது, நடன இயக்குநர் ராதிகா இயக்கத்தில் ‘தி ப்ரூப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ரித்விகா, அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் சாய் தன்ஷிகா ஆக்ரோஷமாக இருப்பதுபோன்று இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 10 ‘தி ப்ரூப்’ படத்தின் டிரைலரை வெளியானது. இந்த டிரைலரை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. ‘தி ப்ரூப்’ படம் கட்டாயம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று படத்தின் நாயகி சாய் தன்ஷிகா, நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here