இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிந்தது..

0
131

Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த தேர்தலில், நடிகை ஹேமா மாலினி பாஜக-வின் மதுரா தொகுதி வேட்பாளரான போட்டியிடுகிறார்; அதற்காக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here