Oscars 2024: சிறந்த சர்வதேச படத்திற்கான விருதை தட்டிச் சென்ற ‘Zone of Interest’..!

0
97

Zone of Interest: திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதானது 1929ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸில் இருக்கும் டொல்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிறந்த சர்வதேச படமாக இங்கிலாந்தில் உருவான ‘தி சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்’ (The Zone of Interest) என்ற படம் வெற்றிபெற்றுள்ளது.

மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதானது ‘ஓப்பன் ஹெய்மர்’ படத்திற்காக ராபர்ட் டௌனி ஜூனியர் தேர்வாகியுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘தி ஹோல்ட் ஓவர்ஸ்’ படத்திற்காக டிவைன் ஜாய் ராண்டால்ஃப் வென்றுள்ளார். தொடர்ந்து, சிறந்த அனிமேஷன் படமாக ‘தி பாங் அண்ட் தி ஹெரான்’ வெற்றிபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here