பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரச்சித்தா.. ரசிகர்கள் வாழ்த்து..  

0
157

Rachitha Mahalakshmi : தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர், பல தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும், கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாத’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழில் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு, ‘மெய்நிகர்’, ‘ஃபையர்’ உள்ளிட்ட சில படங்களில் ரச்சித்தா நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் ‘எக்ஸ்ட்ரீம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் காணும் ரச்சித்தாவுக்கு ‘Fire’ படக்குழு வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ரச்சித்தா தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here