‘மண்டைக்கு சூரு ஏறுதே’.. ‘நான் பாடிய பாட்டை கேட்டு ரசியுங்கள்’ – பிரேம்ஜி வேண்டுகோள்..

0
124

Soodhu Kavvum 2: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் அண்டு வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். படத்தில் சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி, இந்த இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.

‘சூது கவ்வும்’ முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கிய நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில், ஹரிஷா, எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் பட்ஸ்ட் சிங்கிளான ‘We Are Not The Same’ பாடல் ரிலீஸாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. 

இந்த நிலையில், நேற்று  ‘சூது கவ்வும் 2’ படத்தின் புதிய பாடலான  ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை கர்ணன், பிரேம்ஜி, ஸ்டீபன் ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர்.

இது குறித்து பிரேம்ஜி தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார் நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் புதிய பாடலை நான் பாடியுள்ளேன். எல்லோரும் அந்த பாடலைக் கேளுங்கள்’ என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here