MI vs RR IPL2024: : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஏப்.1) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்பேரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா பவுல்ட் பந்துவீச்சில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அவுட்டாகினர்.
இதனால், மும்பை அணி 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டிவால்ட் பிரவீஸும் பவுல்ட் ஓவரில் கோல்டன் டக் ஆனார். அதைத்தொடர்ந்து இஸான் கிஷனும் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.
34 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். கடைசியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து மும்பை அணியை தோற்கடித்தது.
இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியின் இந்த தோல்வி ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றைத்தை கொடுத்துள்ளது. மேலும், இந்த தொடரின் குறைந்த ரன்கள் எடுத்த அணியாக மும்பை குறிப்பிடப்பட்டுள்ளது.