Today Gold Rate: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

0
140

Today Gold Rate: 2024ஆம் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்..

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வந்த நிலையில் ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியிருக்கிறது. தங்கம் விலை நேற்று (ஜன.3) சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று (ஜன.4) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.38,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை:

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.4,808க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,504க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.78க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழா: விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here