KamalHaasan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார்.
முதற்கட்டமாக நேற்று (மார்ச்.29) ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “ எனது பிரசாரத்தை ஈரோட்டில் தொடங்குவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒரு காரணம் பெரியார், மற்றொன்று இடைத்தேர்தலின் போது எனக்கு நீங்கள் காட்டிய அன்பு தான்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இதற்கு காரணம் தியாகம் என பலர் கூறுகின்றனர். ஆனால், அது தியாகம் இல்லை வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம்” என கூறினார்.