கல்யாண சாப்பாடு போட இருக்கும் சிவாங்கி.. திருமணம் எப்போது?..

0
163

Actress Sivaangi: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இவர், பல ஆல்பங்களுக்கு பாடல் பாடியுள்ளார். மேலும், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’, ‘டான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது சிவாங்கிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு காரணம் சிவாங்கியின் பதிவு தான். அவர் தனது பதிவில் திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில், “சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறந்தது என எதாவது ஒரு நல்ல செய்தியின் பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

எனது நண்பர்களுடைய பதிவும் அப்படித்தான் வெளியாகிறது. அப்போ, நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?.. எனக்கும் திருமணம் செய்ய வேண்டிய நாள் நெருங்கிவிட்டதா?” என்பது போல கூறியுள்ளார்.

சிவாங்கியின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் சிவாங்கிக்கு திருமண ஆசை வந்துவிட்டது, அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது உள்ளிட்ட பல செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திகளுக்கு சிவாங்கி தான் விளக்கமளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here