MKStalin: தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை தேர்தலில் போட்டியிடாததற்காக அவர் கூறிய விளக்கம் சிரிப்பாக உள்ளது. தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என அவர் கூறியிருக்கிறார்.
இதனை யாரை பார்த்து சொல்கிறார்? தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற பணத்தை உங்களுக்கு தர முடியாது என சொல்லிவிட்டார்கள் போல. மக்களவை தேர்தலில் நீங்கள் நின்றால் மக்கள் தக்க பாடம் புகட்டிவிடுவார்கள் என்பதற்காகவே நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை” என்றார்.