‘இந்த படத்தின் கதையை கேட்டு நான் அழுதுட்டேன்’ – ஜி.வி.பிரகாஷ்

0
124

GV Prakash kumar: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘டியர்’. இந்த படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் படம் குறித்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார் கலந்துகொண்ட பேசினார்.

அவர் பேசியதாவது, “என்னிடம் எல்லோரும் வாராம் வாராம் உங்களது படம் வருதே எனக் கேட்கிறார்கள். இவை அனைத்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக உருவான படங்கள். தற்போது தான் அனைத்துப் படங்களும் ரிலீஸாகிறது.

டியர் திரைப்படம் குறித்து ஒருநாள் ஐஸ்வர்யா ராஜேஷ் விமான பயணத்தின் போது சொன்னார். இந்த கதையை கேட்டுப் பாருங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் என நினைத்தேன். ஆனால் கதையை கேட்டவுடன் நான் அழுது விட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உடனே நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்தோம்” என்றார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here