ஹெச்.வினோத்தின் உதவி இயக்குநர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

0
101

Naargarappor: இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நாற்கரப்போர்’. இவர் ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தை வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வின் நடிக்கிறார். மேலும், இவர்களுடன் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார். மேலும், ரஞ்சித் சி.கே. படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here