‘சிறு தயாரிப்பு படங்களை நான் எப்போதும் ஆதரிப்பேன்’ – தயாரிப்பாளர் தனஞ்செயன்

0
137

Vallavan vaguthadhada: இயக்குநர் விநாயக் துரை இயக்கி, தயாரிக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார், நல்லமுத்து சேவியர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

என்னால் முடிந்தவரைத் தினமும் படங்களைப் பார்த்து வருகிறேன். பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்கப்பட்டுள்ளது. கேபிள் சங்கர் சொல்லி இந்தப் படத்தைப் பார்த்தேன், பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ படம் ஒரு தனித்துவமானது. இது புதியவர்களின் முயற்சியாகும், ஊடகங்களின் ஆதரவு கட்டாயம் இந்த படத்திற்கு வேண்டும். அப்போ தான் ஓடிடியில் பிசினஸ் செய்ய முடியும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here