‘The G.O.A.T’ அடுத்தக்கட்ட ஷூட்டிங்.. துபாய் சென்ற விஜய்.. வைரலாகும் புகைப்படம்..

0
127

‘The Greatest of All Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் துபாய் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கான புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here