ராவணனின் தம்பியாகும் விஜய் சேதுபதி..! வைரலாகும் முக்கிய படத்தின் அப்டேட்..!

0
137

Vijay Sethupathi: இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராவணனனாக கன்னட நடிகர் யஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக நடிக்க சன்னி தியோல் மற்றும் கும்பகர்ணனாகவாக பாபிதியோல் நடிக்க அவர்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுபோல் ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here