பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ்..

0
96

Actress Amrita Pandey: ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பிற மொழிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. இவர், திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவரது சகோதரி வீணா பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அம்ரிதா பாண்டே தனது கணவருடன் சென்றார். தொடர்ந்து, திருமணம் முடிந்து சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர்,

அப்போது, அம்ரிதா பாண்டே தனது திரையுலக வாழ்க்கை குறித்து மிகுந்த கவலையிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்ரிதா வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற நிலையில் வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது சகோதரி வீணா பாண்டே அவரது அறையை திறக்க முயன்றார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அம்ரிதாவின் சகோதரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அம்ரிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்ரிதா பாண்டே மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here