‘அம்பேத்கர் சுடர்’ விருது பெறும் பிரகாஷ் ராஜ்.. விசிக அறிவிப்பு..

0
181

Prakash Raj: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்படும்.  இந்த விருதானது 2007ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், சமூகம், அரசியல், பண்பாடு, கலை போன்றவற்றில் சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ்-க்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி-க்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா வருகிற மே 25ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here