கமல் படத்தின் விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி?..  உற்சாகத்தில் ரசிகர்கள்..!

0
130

‘Rajini Kamal’: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இந்தியன் 2’.இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. ‘இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக நிலையில் தற்போது இது உண்மையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here