சைபர் கிரைம் விசாரணை என்னாச்சு?..  பட புரமோஷனுக்கு சென்ற தமன்னாவுக்கு கேள்வி?..

0
160

Actress Tamannaah: 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் (viacom) என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளை பேர்பிளே (Fairplay) என்ற நிறுவனம் தனது செயலியின் மூலம் சட்டவிரோதமாக ஒளிபரப்பி உள்ளது.

பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் காவல் துறை சம்மன் அனுப்பியது.

இது குறித்த விசாரணை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விசாரணைக்கு நடிகை தமன்னா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், அந்தத் தேதியில் தான் மும்பையில் இல்லை எனவும் அதனால் வேறொரு தேதியில் விசாரணைக்கு வருவதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘அரண்மனை 4’ படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக இன்று படக்குழுவுடன் சேர்ந்து தமன்னா ஹைதராபாத் சென்றுள்ளார்.

அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இன்று விசாரணைக்கு செல்லாமல் படத்தின் புரமோஷனுக்குச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here