அஜித்துடன் இணையும் 90ஸ் கிட்ஸ் கனவு கன்னிகள்..!

0
122

Good Bad Ugly: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் அஜர்பைஜான் செல்ல இருக்கிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து, விஷால், எஸ்,ஜே,சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என அனைவருக்கும் தெரியும், அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது அஜித்திடம் கதை கூறியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போனதால் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த புதிய படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்திற்கு 163 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியானது. அதன்படி, அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

தற்போது இந்த படத்தில் இரண்டு 90ஸ் கிட்ஸ் கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்துடன் இணைந்து சிம்ரன் மற்றும் மீனா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியான நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும், 90ஸ் கிடஸ் படங்களின் ஜோடியான மீனா மற்றும் சிம்ரன் ஆகியோர் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிப்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here