DC vs KKR – 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி..

0
98

IPL 2024: ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா – டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா – ஜேக் பிரேசர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.  பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வைபவ் ஆரோரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே கொல்கத்தா பந்து வீச்சில் டெல்லி அணி தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அபிஷேக் போரல் 18 ரன்களிலும், ஷாய் ஹோப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பண்ட் 27 ரன்களிலும், அக்சர் படேல் 15 ரன்களிலும், ஸ்டப்ஸ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.  பின்னர் களம் இறங்கிய குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.  தொடக்க வீரரான ஃபில் சால்ட் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, சுனில் நரைன் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ரிங்கு சிங் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், வந்த சிரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடினார். அவருடன் இணைந்து வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து தீவிர ஆட்டத்தை தொடங்கிய கொல்கத்தா அணி ஆட்டத்தின் முடிவில், 16.3 ஓவர்களில் 157 ரன்களுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here