‘எனக்கு கேங்ஸ்டராக நடிக்க ஆசை’ – ரசிகர்களுக்கு ரிப்ளை கொடுத்த மாளவிகா மோகனன்..!

0
199

Actress Malavika Mohanan: மலையாள சினிமாவில் 2013ஆம் ஆண்டு ரிலீஸான ‘பட்டம் போலெ’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து, ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

பின்னர், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரம்மாணடமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் தனது ‘X’ தளத்தில் இருக்கும் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார். அந்த வகையில்,  ‘எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாளவிகா மோகன், “எனக்கு கேங்ஸ்டராக நடிக்க ஆசை! கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்ஷன் சீன்களுக்குப் பயிற்சி பெற்றிருப்பதால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்” என ரிப்ளை கொடுத்தார்.

தொடர்ந்து, மற்றொரு ரசிகர், “உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு, “அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா” என பதிலளித்துள்ளார். தற்போது இவரது ரிப்ளைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here