ரஜினி பட டிரைலரை கேலி செய்த வெங்கட் பிரபு? 

0
194

Venkat Prabhu: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் கார்த்திக் குமார். இவர், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமா படங்களின் டிரைலரை கேலி செய்து பேசினார். இந்த வீடியோ வைரலானது. அதில், “இப்போது வரும் படங்களின் டிரைலர்கள் எல்லாம் ஒரே மாதிரி வருகின்றன.

அவன் வரப்போறான்.. அதோ வரான்.. அவன் வந்துட்டான்.. என்றே உள்ளது. மேலும், அந்த நடிகர்களின் பழைய படங்களின் வசனங்களும் இடம்பெறுகின்றன” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள்,  ‘கூலி’ படத்தின் டிரைலரை கார்த்திக் குமார் கலாய்த்துள்ளார், அதனை வெங்கட்பிரபு ஆதரித்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார். இவர் மறைமுகமாக ‘கூலி’ டிரெய்லரை கேலி செய்திருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த விவகாரத்திற்கு, வெங்கட் பிரபு விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இல்லவே இல்லை. இது என்னை போன்ற கமர்சியல் படங்கள் எடுக்கும் எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்தக் கூடிய கருத்துத் தான். கார்த்திக் குமார் சொல்வது ஒருவகையில் உண்மை தான்.

கமர்சியல் படங்களை ஒரே மாதிரியாக எடுப்பதை தான் அவர் விமர்சித்துள்ளார்.  வழக்கமான கமர்சியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்களை எங்களைப் போன்ற இயக்குநர்கள் கொடுத்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here