சசிகுமார் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ‘அட்லீ – ரன்வீர் சிங்’.. வைரலாகும் வீடியோ..!

0
114

Atlee Ranveer Singh: இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் மற்றும் கமலை வைத்து இந்தியன் 2.3 படங்களை எடுத்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்க தயாராக இருக்கிறார். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே புதுச்சேரியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்றது.

பல்வேறு காரணங்களால் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கும், சங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அந்த வகையில் இந்த விழாவில் கல்ந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் ஒன்றாக இணைந்து ‘மதுர குலுங்க குலுங்க’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

ஷாருக்கானை வைத்து அட்லீ ‘ஜாவன்’ என்ற ஹிட் படத்தை கொடுத்த நிலையில் பாலிவுட்டிலும் அட்லீக்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் மூலம் ரன்வீர் சிங்கும் அட்லீயும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். முன்னதாக அம்பானி வீட்டு நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து நடனமாடினர்.

அதே போல், சங்கர் வீட்டு விழாவில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து அதிதி சங்கரும் குத்தாட்டும் போட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here