‘அயலான்’ படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் ரிலீஸ்..!

0
122

Ayalaan: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.

சமீபத்தில் ‘அயலான்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, ‘அயலான்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘அயலான்’ படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் இன்று (ஜன.07) வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையும் படிங்க: ‘கத்ரீனாவுடன் நடித்தது நம்பமுடியாத ஒரு விஷயம்’ – விஜய் சேதுபதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here