Ramam Raghavam: தென்னிந்திய திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம்வருபவர் சமுத்திரக்கனி. இவர், தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும், பிருத்வி போலவரபு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகுகிறது.
இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ராமம் ராகவம்’ படம் அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று. முன்னதாக ‘ராமம் ராகவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
தொடர்ந்து படத்தின் பணிகள் முடிந்த நிலையில் தற்போது ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாலா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமுத்திரக்கனியின் ரசிகனாக நான் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நல்ல நடிகராக அவர் நிரூபித்து விட்டார்.
அவருடைய உழைப்பிற்கு நான் மிகப்பெரிய ரசிகன். கடுமையாக உழைக்கக் கூடியவர் சமுத்திரகனி. மற்றவர்களுக்கு உதவக்கூடிய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவி செய்வதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றிப் பெற எனது வாழ்த்துகள்” என புகழந்து பேசினார்.