இந்த ஆண்டிற்கான சிறந்த படம் ‘ஆவேஷம்’ தான்.. பகத் பாசிலை பாராட்டி தள்ளிய நயன்தாரா..

0
199

Nayanthara: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த படம் ‘ஆவேஷம்’. இந்த படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.  கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை இந்த படம் ரிலீஸாகி உலகளவில் 125 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் செய்த ரீல் வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

இந்த படத்தைப் பார்த்த சமந்தா , சைத்திரா மற்றும் பலரும் படக்குழுவை பாராட்டினர். அதைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் இந்தாண்டுக்கான சிறந்த படமாக ‘ஆவேஷம்’ அமையும், ஜித்து மாதவனின் இயக்கம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.  உண்மையான கேங்க்ஸ்டரான பகத் பாசிலின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

அதைத்தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழு அனைவரையும் நயன்தாரா பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here