Kids-ஓட வாங்க.. Enjoy பண்ணிட்டு போங்க.. ‘டபுள் டக்கர்’ படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ்..!

0
104

‘Double Tuckerr’ தமிழ் சினிமாவில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீரஜ். இவர் தற்போது மீரா மஹதி இயக்கத்தில் உருவாகும் ‘டபுள் டக்கர்’ படத்தில் நடிக்கிறார். தீரஜுக்கு ஜோடியாக ஸ்முரிதி வெங்கட் நடிக்கிறார்.

இந்த படத்தை ஏர் ஃபிளிக் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்களுடன், சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ஃபேண்டசி திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்திற்காகவே இரண்டு புதுமையான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி ‘டபுள் டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். யூடியூப்பில் வெளியான டீசர் தற்போது வரை 3M பார்வையாளர்களை கடந்துள்ளது.

தொடர்ந்து, அனிமேஷன் கதாபாத்திரங்கள் இருப்பதால் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் இந்த புதிய அனிமேஷன் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘டபுள் டக்கர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ‘டபுள் டக்கர்’ படம் ரிலீஸாகியுள்ளது. மாஸ் எண்டெர்டைன்மெண்ட்டில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த படம் குறித்து ரசிகர்கள் கூறுகையில், “இந்த டபுள் டக்கர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. கதைக்களம் வித்தியாசமாக இருந்தது. படம் முழுவதும் செம்ம கலாயாக உள்ளது.

சுனில் ரெட்டி மற்றும் ஷாரா ஆகியோரது காமெடிகள் வொர்க்கவுட் ஆகியுள்ளது. படத்தில் சில ஸ்பூஃப் சீன்கள் உள்ளன. அனைத்தும் காமெடியாக இருந்தது. கட்டாயம் குழந்தைகளுடன் வந்து படத்தை பார்த்து ரசித்துச் செல்லுங்கள்” என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here